பாடப்புத்தக விநியோகம் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
கடந்த வருடம் தரம் ஆறு மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களை இந்த வருடம் தரம் ஆறு மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.
இந்த வருடம் தரம் ஆறு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தையே தொடர முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தரம் ஆறுக்கான புதிய கல்வி சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் செயலாளர்
எனினும் எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான ஆட்சேபனைகள் காரணமாக அரசாங்கம் அவற்றை 2027 வரை ஒத்திவைத்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் (Nalaka Kaluwewa) கேள்வி எழுப்பப்பட்டபோது, தரம் ஆறு மாணவர்களுக்குத் தேவையான செய்முறை புத்தகங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2025 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான மனைப்பொருளியல் (Home Economics) பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (DOE) விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |