அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் இன்று (21) முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
அதன்படி, முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டாய விடுமுறை
இதேவேளை புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இது கண்டறியப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |