மட்டக்களப்பில் அதிசயம்- படையெடுத்துச் சென்று புகைப்படம் எடுக்கும் மக்கள்!
batticalo
eastern province
manmunai
eruvil
By Kalaimathy
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்து கொண்டிருப்பதாகவும் அதனைப் பார்ப்பதற்கு மக்கள் படையெடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மகிழூர்முனை கிராமசேவையாளர் பிரிவில் பிராமணர் ஒழுங்கையில் வயல் ஓரமாக அமைந்துள்ள வேம்ப மரத்திலிருந்தே பால் வடிந்து கொண்டிருக்கின்றது.
இத்தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து அதனைப் பார்வையிட்டும், புகைப்படம் எடுத்தும், மரத்திற்கு பட்டு கட்டியும், அதனருகே பாத்திரம் ஒன்று வைத்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தும் வருவதையும் அவதானிக்க முடிகின்றது எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




