பேனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்: வைத்தியசாலையில் அனுமதி
மாணவன் கொண்டு வந்த காபன் பேனாவால் சக மாணவர்கள் மீது கோடு வரைந்த நிலையில் அவர்களுக்கு ஒருவகை அரிப்பு ஏற்பட்டு லைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பியகம ஆரம்ப பாடசாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பேனாவால் சக மாணவர்கள் மீது கோடு வரைந்த மாணவன்
குறித்த பாடசாலையில் தரம் 04 இல் கல்வி கற்கும் 14 மாணவர்கள் நேற்று (21) திங்“கட்கிழமை திடீரென ஏற்பட்ட அரிப்பு காரணமாக பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அதே வகுப்பைச் சேர்ந்த மாணவன் பாடசாலைக்கு கொண்டு வந்த காபன் பேனாவால் சக மாணவர்கள் மீது கோடு வரைந்துள்ளான் பின்னர் மாணவர்கள் அதை தண்ணீர் ஊற்றி கழுவிய பின்னர் அவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என கூறப்படுகிறது
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
