செங்கடலில் தொடரும் பதற்றம் : ஹவுதி அமைப்பினரால் தாக்கப்பட்ட மற்றுமொரு கப்பல்
செங்கடல் வழியாக பயணித்த மற்றுமொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, செங்கடல் வழியாகப்பயணித்த சுவிஸ் கப்பல் ஒன்றின் மீதே இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கி சரக்குகளை ஏற்றிச் சென்ற சுவிஸ் கப்பல் நிறுவனமான MSC இற்கு சொந்தமான சரக்குக் கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்
ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களான ஹவுதி அமைப்பினர், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது அவ்வப்போது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
தற்போது, சுவிஸ் சரக்குக் கப்பலொன்றின் மீதும் ஹவுதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதலினை நடத்தியுள்ளார்கள்.
அதிஷ்டவசமாக கப்பலில் பயணித்த பணியாளர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என MSC நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிப்பது ஆபத்து
ஆனால், கப்பலுக்கு எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் ஹவுதி அமைப்பால் தாக்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன், இனி செங்கடல் வழியாக பயணிப்பது ஆபத்து என்பதால் அந்த வழியாக அனைத்து பயணங்களையும் நிறுத்துவதாக MSC நிறுவனம் அறிவித்திருந்தது.
அப்படியிருக்கையில், மீண்டும் அந்த கப்பல் செங்கடல் பயணித்ததற்கான காரணம் புதிராக இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |