அலாஸ்காவில் மாயமான அமெரிக்க விமானம் மீட்பு - விமான பயணிகளின் நிலை
அலாஸ்காவில் (Alaska) 10 பேருடன் காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளாகி சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
பனிபடர்ந்த பகுதியில் மீட்கப்பட்ட விமானத்திற்குள் இருந்து மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரின் உடல்கள் விமானத்தின் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்பது பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன், வியாழக்கிழமை உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கி பயணித்த நிலையில் காணாமல் போனது.
பல மணி நேர போராட்டம்
அமெரிக்காவில் உள்ள மேற்கு அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.37 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் எனும் சிறிய ரக விமானம் புறப்பட்ட 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது.
விமானம் மாயமான தகவலை அடுத்து களமிறங்கிய மீட்பு குழுவினர், மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வை நிலை காரணமாக பல மணி நேரங்களாக மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
இதனையடுத்து, நோம் நகரிலிருந்து தென்கிழக்கே 34 மைல் தொலைவில் விபத்தில் சிக்கிய நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 10 பேரும் இறந்திருக்கலாம் என்றும் விமானத்திற்குள் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகளின் குடும்பத்தினருக்கும் தகவல்
விமானத்தில் யார் யார் பயணித்தார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் பயணிகளின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோம் தன்னார்வ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்து சம்பவங்கள் நடந்து 69 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)