கொழும்பில் கொடூரம் : நண்பரைச் சந்திக்கச் சென்ற நபர் : கொலை செய்யப்பட்டு காட்டில் புதைப்பு
கொழும்பு, கெஸ்பேவ பகுதியில் நண்பரைச் சந்திக்க சென்ற நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பொல்கசோவிட்ட பகுதியில் அவரது உடல் புதைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் நேற்று (28) மூன்று சந்தேக நபர்களை கெஸ்பேவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தனது கணவரை காணவில்லை என உயிரிழந்தவரின் மனைவி கடந்த 24 ஆம் திகதி பேராதனை காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
நண்பனுடன் தகராறு
கெஸ்பேவ பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்கச் செல்வதாக தனது கணவர் கடைசியாக தன்னிடம் கூறியதாக உயிரிழந்தவரின் மனைவி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 23ஆம் திகதி காலையில் குறித்த நபர் தனது நண்பரைச் சந்திக்கச் சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் நண்பர் மற்றும் மேலும் சிலர் சேர்ந்து குறித்த நபரை கொலை செய்து அவரது உடலை காட்டுப் பகுதியில் புதைத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த நபர் கண்டி, முருத்தலாவ, கருவலவத்தையைச் சேர்ந்த 30 வயதானவர் ஆவார்.
கைதானவர்கள் 20,36,37 வயதான நபர்கள் ஆவார். இதற்கிடையில் உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் இன்று (29) நீதித்துறை விசாரணையும் இடம்பெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |