முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதி கோரி போராட்டம்

By Laksi Jun 26, 2024 08:41 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (26) முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்த ஆளுநரின் ஊடக செயலாளர்!

யாழில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்த ஆளுநரின் ஊடக செயலாளர்!

நீதி கோரி போராட்டம்

இதன்போது, வேண்டும், வேண்டும் சர்வதேச நீதி வேண்டும். எங்கே எங்கே உறவுகள் எங்கே?. இராணுவத்திடம் கையளித்த எங்களது உறவுகள் எங்கே?. வேண்டாம் வேண்டாம் ஓ எம் பி வேண்டாம். உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள். கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே . உங்கள் இராணுவத்தை நம்பி கையில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதி கோரி போராட்டம் | Missing People Relatives Protest In Mullaitivu

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஐ.நா சபையில் எங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன

மக்களுக்கு மிரட்டல்

இந்த நிலையில், நீதி கோரி போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் தமது பிள்ளைகளை உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதி கோரி போராட்டம் | Missing People Relatives Protest In Mullaitivu

இலங்கையில் ஓ.எம்.பி அலுவலகத்தினால் நட்ட ஈடும் கொடுத்து மரண சான்றிதழும் கொடுக்கும் ஏற்பாடுகள் மக்களை விரட்டி விரட்டி செய்கின்றார்கள்.

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர் ஊடகாவும் கிராம அமைப்புக்கள் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுத்தும் மக்களை மிரட்டுகின்றார்கள்.

ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பில் பதற்றம்

ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பில் பதற்றம்

சர்வதேச நீதிமன்றம்

இந்த பதிவுகள் செய்யாவிடின் எந்த ஒரு அரச பதிவுகளும் உதவிகளும் தரமுடியாது என்று பயங்கரமான மிரட்டல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதி கோரி போராட்டம் | Missing People Relatives Protest In Mullaitivu

இந்த மிரட்டல்களை தாண்டி எமக்கான நீதி கிடைக்கவேண்டும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச கூண்டில் ஏற்றி நீதி கிடைக்க வேண்டும்.

எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தான் போராடி வருகின்றோம். எமக்கான நீதியினை சர்வதேசம் மட்டும் தான் தரவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

காவல்துறை உத்தியோகத்தரை தாக்கி மர உச்சிக்கு ஏறிய நபர் கைது

காவல்துறை உத்தியோகத்தரை தாக்கி மர உச்சிக்கு ஏறிய நபர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025