களுவாஞ்சிகுடியில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் விசாரணை!
Missing Persons
Sri Lankan Tamils
Tamils
Sri Lankan Peoples
By Rusath
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று(20) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு, மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் 40 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.
விசாரணை
மேற்படி விசாரணைகளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழுத் தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மேற்கொண்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை காலையிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த விசாரணைகள் மாலை 4 மணிவரை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



4ம் ஆண்டு நினைவஞ்சலி