மகளிர் தினமும் எங்களுக்கு கருப்பு தினம்தான்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் (காணொலி)
சர்வதேச மகளிர் தினத்தில் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டமானது இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகம் முன் இடம்பெற்றுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
தமது போராட்டமானது இன்றுடன் 1841 நாட்களாக தொடர்வதாகவும் இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேசமே கொண்டாடுகின்ற வேளை இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் அதிலும் குறிப்பாக பெண் உறவுகள் தொடர்பில் இதுவரையில் எதுவித முடிவும் இல்லாமல் உள்ளோம்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் உள்ளோம்.
சர்வதேச பெண்கள் தினம் மற்றும் சர்வதேச சிறுவர்கள் தினம் என பல தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும் எந்த தினமாக இருந்தாலும் அது தமக்கு கருப்பு நாளாகதான் அமையும்.
எமது உறவுகள் கையில் வந்து கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போறதாக இல்லை எனவும் இதற்கான நீதியை சர்வதேசம்தான் பெற்றுதர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
