ஹமாஸ் தாக்குதலில் காணாமல் போன இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் போது காணாமல் போன மற்றைய இலங்கையர் பற்றிய பிரத்தியேக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி ஹமாஸின் பணயக்கைதிகளில் சுஜித் யத்வார பண்டாரவும் இருக்கலாம் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், யாதவர பண்டாரவின் பிள்ளைகள் வழங்கிய டி.என்.ஏ மாதிரிகளுக்கும் சடலங்களுக்கும் இடையில் பொருத்தம் உள்ளதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை பிரஜை
இதேவேளை, கடத்தப்பட்டவர்களில் சுஜித்தும் அடங்குவதாக சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், ஹமாஸ் அமைப்பு செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பெயர் பட்டியலை சமர்ப்பித்தால் சுஜித்தின் பெயர் இருப்பின் அவரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான வென்னப்புவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சுஜித் யாதவர பண்டார 2012 இல் வேலைக்காக இஸ்ரேல் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 10 மணி நேரம் முன்