கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு
கம்பளை (gampola) கஹடபிட்டியவில் உள்ள மொத்த விற்பனைக் கடையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் சுமார் 10 நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கம்பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் கம்பளை கஹடபிட்டிய, பபில பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய மொஹமட் ஹசன் ரஷீக் என்பவராவார்.
இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடையில் வேலை செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
திருடியதாக குற்றச்சாட்டு
அதே பகுதியில் இந்த மொத்த வியாபாரிக்கு சொந்தமான களஞ்சியசாலை ஒன்றும் உள்ளதுடன், மொத்த வியாபாரியிடம் இருந்து எதையோ திருடிவிட்டதாக கூறி உயிரிழந்த இளைஞரை அவர் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் கடை உரிமையாளரும், அவரது மகனும், மேலும் பலர் இணைந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையில் முறைப்பாடு
இந்த இளைஞன் தாக்குதல் நடத்தப்பட்ட நாளிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் (22) அவர் வீட்டுக்கு வராததால் குறித்த இளைஞனின் தாயார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
கடையில் தனது மகன் தாக்கப்பட்டதை அறிந்த தாய், அன்றைய தினம் தனது மகன் காணாமல் போனதாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |