டெல்லி அணிக்கு பலத்த அடி : வெளியேறும் முக்கிய வீரர்
தற்போதுதான் மூன்று போட்டிகளில் வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக போராடி வரும் டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவு ஒன்று ஏற்ட்டுள்ளது.
இதன்படி அணியின் முக்கிய வீரராக இருந்த அவுஸ்திரேலியாவின் அனுபவ வீரரான மிட்செல் மார்ஸ் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரி 20 உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியாவின் முக்கிய வீரர்
வரவிருக்கும் ரி 20 உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியாவின் முக்கியமான வீரர் என்பதால், அவரின் சேவைக்காக அவுஸ்திரேலியா நிர்வாகம் அவரை அவுஸ்திரேலியாவிற்கு திரும்ப அழைத்து தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துவருகிறது.
அவருக்கு பதிலாக மாற்று வீரர்களுடன்
இந்நிலையில் மிட்செல் மார்ஸின் கம்பேக் குறித்து பேசிய டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங், “மிட்செல் மார்ஸ் ஐபிஎல் தொடருக்கு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இல்லை.அவருக்கு பதிலாக மாற்று வீரர்களுடன் செல்லவேண்டிய இடத்தில் அணி இருக்கிறது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அவரை ரி 20 உலகக்கோப்பைக்குள் மீட்கும் நடவடிக்கையில் ஆர்வமாக இருந்ததால், நாங்கள் அவரை முடிந்தவரையில் விரைவாக அனுப்பியுள்ளோம். ரி 20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தயாராக இருப்பார் என்று நினைக்கிறேன்” என பொண்டிங் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |