யாழ்ப்பாணத்தில் தீ வைக்கப்பட்ட கட்சி அலுவலகம்: விசாரணைகள் தீவிரம்!
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடைகளை கொண்ட கடைத்தொகுதிக்கு இன்றைய தினம் (14.01.2026) அதிகாலை வேளை தீ வைக்கப்பட்டுள்ளது.
இரு நபர்கள் கதவுக்கு தீ மூட்டி விட்டு தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவுகளுக்கே தீ வைக்கப்பட்டமையால் ,பெரியளவிலான சேதங்கள் ஏற்படவில்லை.
குறித்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான அருண் சித்தார்த் என்பவர் கட்சி அலுவலகத்தை நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை
கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |