தமிழர் அடையாளங்களைச் சிதைக்கும் அதிகார அரசியல்...!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய ஆட்சியிலும் தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டுச் சிதைக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மீறியும், முறையான அனுமதிகள் இன்றியும் தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள் மற்றும் சிலைகள் அமைக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அதிகார அரசியலை இது வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள், அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கும் நில ஆக்கிரமிப்புகள் தமிழ் மக்களின் பூர்வீக நில உரிமையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
கடந்த கால அரசாங்கங்களைப் போலவே, தற்போதைய ஆட்சியும் பணிந்து போவது தமிழ் மக்களிடையே நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தற்போது கின்னியா வெந்நீற்று ஊற்றுக்கும் மற்றும் இராவணனுக்குமிடையிலான முன்னுக்கு பின் முரணாக பகிரப்பட்டு வரும் விமர்சனங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |