எதிர்கட்சி தலைவராகப்போகும் உதயநிதி! மு.க. ஸ்டாலின் சொந்த தொகுதியில் தோல்வி
புதிய இணைப்பு
தி.மு.க கூட்டணியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் 4718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அவரால் முன்னிலையை அடைய முடியவில்லை.
இறுதியில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 67,530 வாக்குகள் பெற்றுள்ளார். 4718 வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.
இதன்படி அக்கட்சியின் சட்டமன்ற தலைவரான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி 51,543 வாக்குகளை பெற்றுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது அரசியல் களத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளன.
தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான எம்.கே.ஸ்டாலின், தமது சொந்த தொகுதியான கொளத்தூரில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.
அந்த தொகுதியில் தொடர்ந்தும் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் வி.எஸ். பாபு தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறார்.
8 ஆயிரம் வாக்குகள்
11 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 12 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் 41,051 வாக்குகள் பெற்றுள்ளார்.
தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 49,099 வாக்குகள் பெற்று 8048 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
அத்துடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அங்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலையில் உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்