இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரம்! வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
srilanka
india
fisherman
peoples
sm stalin
By S P Thas
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது.
மூழ்கிய கப்பலில் இருந்த மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த நிலையிலேயே, இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதால், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.