வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடமாடும் சேவை!
வவுனியா “நானே ஆரம்பம் வெல்வோம் சிறிலங்கா -SMART சூரன்களோடு” எனும் தொனிப்பொருளிலான மக்கள் நடமாடும் சேவை வவுனியா காமினிமகாவித்தியால விளையாட்டரங்கில் இன்று(29) இடம்பெற்றது.
தேசியமற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார கலந்துகொண்டார்.
குறித்த நடமாடும் சேவையில் தொழிலாளர் திணைக்களம், ஊழியர் நம்பிக்கை நிதியம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், சிறுதொழில் அபிவிருத்திபிரிவு, தொழிற்பயிற்சி அதிகாரசபை உட்பட பத்திற்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கியிருந்தது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அத்துடன் ருமேனியா,மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பா நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான், அபிவிருத்திக்குழு தலைவர் கு.திலீபன், மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர,பிரதேச செயலாளர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |