அதிதீவிர புயலாக வலுவடையும் மொச்சா புயல்..!
வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மொச்சா ' புயல் இன்று அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
இந்த சூறாவளியானது அடுத்து வரும் 6 மணித்தியாலங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடாவின் மத்திய பிரதேசத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 14ம் திகதி
இதன்பின்னர், படிப்படையாக திசையை மாற்றி நாளை மறுதினம் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியன்மாரை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காற்று
கரையை கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எனினும் கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இதன் காரணமாக, மேற்கு வங்க மாநிலம் திகாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை 8 குழுக்களையும், 200 மீட்புப் பணியாளர்களையும் தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.