1 லீட்டரில் 150 கிலோ மீட்டர் பயணம்! யாழ்ப்பாணத்தில் புதிய கண்டுபிடிப்பு (காணொளி)
யாழ்ப்பாணத்தில் புதிய கண்டுபிடிப்பு
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மனிதன் ஏதோ ஒரு விதத்தில் பல்துறைசார்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றான்.
தற்கால எரிபொருள் நெருக்கடி காலத்திலும் சில முயற்சியுடையோர் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் தமது பொழுதை வீணாகக் களிக்காமல் அவற்றை மிகுந்த பிரயோசனமாகப் பயன்படுத்துபவர்களும் தற்காலத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
எனினும் கண்டு பிடிப்புக்களுக்கும், புதிய புதிய உற்பத்திகளுக்கும், இறக்குமதிகளுக்கும், சர்வதேசத்தையே நம்பியிருக்கும் நம் இலங்கையில் ஆங்காங்கே எங்கோயே மூலை முடுக்குகளில் தத்தமது திறமைகளைக் காண்பித்து, புதிய புதிய கண்டு பிடிப்புக்களையும், உற்பதிகளையும் வெளிக்காட்டுபவர்களாக நம்நாட்டு கண்டுபிடிப்பாளர்கள், இருக்கத்தான் செய்கின்றார்கள்.
குறைந்த எரிபொருளை பாவித்து நீண்ட தூரம் இதன் மூலம் பயணிக்க முடியும்
அப்படியாக யாழ். மாவட்டத்தில் ஒருவர் சைக்கிள் ஒன்றை எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நவீனமயப்படுத்தியுள்ளார்.
குறைந்த எரிபொருளை பாவித்து நீண்ட தூரம் இதன் மூலம் பயணிக்க முடியும் என அவர் கூறுகிறார்.
அவரது கண்டுபிடிப்பை பலரும் வாழ்த்தி பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், ஐபிசி தமிழ் அவரை நேர்காணல் செய்தது.
