இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்திய தேர்தல்: நடுக்கடலில் தியானம் செய்யும் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) கன்னியாகுமரிக்கு(Kanniyakumari) வந்து அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தல் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
7ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் ஜூன் 1ஆம் திகதி நடைபெற உள்ளது.
45 மணி நேரம் தியானம் செய்யும் மோடி
அதன் கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் சுமார் 45 மணி நேரம் அமர்ந்து தியானம் செய்ய உள்ளார்.
மேலும், மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 தேர்தலில் இமயமலையில் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார்.
அங்கு, இடுப்பில் காவித்துண்டு, தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி என மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.
மக்களவை தேர்தல்
அதேபோல தான் இப்பொழுதும்தியானம் மேற்கொள்கிறார். அவர் தியானம் செய்யவுள்ள 45 மணிநேரமும் இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வாராம்.
அவருக்காக சிறப்பு வசதிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று விவேகானந்த கேந்திரா பொறுப்பாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் இன்று வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரைக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |