தரையில் கிடந்த இந்திய கொடி - மோடியின் நெகிழ வைக்கும் செயல் (காணொளி)
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று (23) ஆரம்பமாகி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தென்னாபிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பினை ஏற்று 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று (23) தென்னாபிரிக்காவிற்கு சென்றுள்ளார்.
ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் வரவேற்பளித்து, பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வேளை மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை அடையாளப்படுத்த தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.
சட்டைப்பையிலே வைத்துக்கொண்டார்
#WATCH | Johannesburg, South Africa | PM Narendra Modi notices Indian Tricolour on the ground (to denote standing position) during the group photo at BRICS, makes sure to not step on it, picks it up and keeps it with him. South African President Cyril Ramaphosa follows suit. pic.twitter.com/vf5pAkgPQo
— ANI (@ANI) August 23, 2023
அப்போது, தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசா, தென்னாபிரிக்க நாட்டுக் கொடியை கையில் எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுத்தார்.
இந்த வேளை பிரதமர் மோடி மேடை ஏறியதும், தரையில் இருந்து இந்திய கொடியை எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுக்காமல் தனது சட்டைப்பையிலே வைத்துக்கொண்டார்.
பிரதமர் மோடியின் இந்தச் செயல் காணொளியாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.