இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கும்! திட்டவட்டமாக கூறினார் மோடி
Sri Lanka Economic Crisis
Narendra Modi
High Commission of India Colombo
Sri Lanka Food Crisis
India
By Kanna
இலங்கை மக்களுடன் இந்தியா தொடர்ந்து நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்காக சர்வதேச அமைப்புக்களுடன் பேச்சு
அத்துடன், இலங்கைக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதற்காக சர்வதேச மன்றங்களில் இந்தியா வலுவாகப் பேசி வருகிறதாக நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், "இலங்கை கடினமான காலங்களை கடந்து செல்கிறது. நீங்கள் அனைவரும் அதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இலங்கையின் நெருங்கிய நண்பராகவும், அண்டை நாடாகவும் இந்தியா இலங்கை மக்களுக்கு தேவையான நிதியுதவி, உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது", எனக் குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்