சற்றுமுன் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை மறுதினம் (11.04.2025) முடிவடையவுள்ளது.
அதன்படி, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பித்து மே 9 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு (Ministry of Education ) இன்று (09.04.2025) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையவழியில் விண்ணப்பிக்க முடியும்
இதேவேளை, நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை இன்று (09) முதல் ஏப்ரல் 30 திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வழிமுறைகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் பெறலாம் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
