ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்களை வைத்திருக்கும் நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன (Madhura Senevirathna) இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்விப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும்
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களுக்கு தேசிய தரங்களை பூர்த்தி செய்யும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும், தொழிலில் நுழைபவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்றும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தென் மாகாண கல்வித் துறை பிரதிநிதிகளுடன் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார்.
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும், மேலும் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும் பட்டதாரிகள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்று அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
