இந்திய அணியின் பிரபல வீரர் ஒருவரின் செயல்: வைரலாகும் காணொளி
மகிழுந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய ஒருவரை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமி மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்.
இந்தியாவின் - உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் உள்ள மலைப்பாதையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து ஏற்பட்ட வேளை அப்பகுதி வழியாக வந்த மொஹம்மட் ஷமி, உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து பள்ளத்தில் சிக்கிய நபரை பத்திரமாக மீட்டுள்ளார்.
காணொளி
அதனை தொடர்ந்து ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ விபத்தில் பாதிக்கப்பட்டவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்துள்ளார்.

அவரது கார் நைனிடால் அருகே மலைப்பாதையில் இருந்து எனது காருக்கு முன்னால் கீழே விழுந்தது. நாங்கள் அவரை மிகவும் பாதுகாப்பாக வெளியே எடுத்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமியின் இந்த செயல் பதிவு செய்யப்பட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் பலரும் இதற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்