ஹமாஸ் அமைப்பிடம் இருந்து 50 நாட்களுக்கு பின்னர் தந்தையிடம் மீண்ட சிறுமி
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு 50 நாட்களாக பிணைக் கைதியாக இருந்த எமிலி ஹேண்ட் என்ற 9 வயது அயர்லாந்து சிறுமியும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எமிலிக்கு அப்பா மட்டும்தான். அவரது தாயார் புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார். ஒக்டோபர் 7 ஆம் திகதி, ஹமாஸ் அமைப்பினர் எல்லையைத் தாண்டி காசாவுக்குள் நுழைந்தபோது, எமிலி இஸ்ரேல்-காசா எல்லைக்கு அருகிலுள்ள தனது நண்பரின் வீட்டில் இருந்தார்.
வலுக்கட்டாயமாக சிறுமியை காசா பகுதிக்கு அழைத்து
ஹமாஸ் அமைப்பினர் அவரது வீட்டிற்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக சிறுமியை காசா பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.ஹமாஸால் பணயக்கைதியாக இருந்த நிலையில் எமிலி தனது 9வது பிறந்தநாளையும் கொண்டாடினார்.
எமிலியின் தந்தை தோமஸ் ஹேண்ட், 63, கடந்த 50 நாட்களாக தனது மகளைக் காணாத நிலையில் இஸ்ரேல் இராணுவத்துடன் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொண்டிருந்தார். இனி தன் மகளை பார்க்க மாட்டேன் என்று அழுதார். தன் ஒரே மகளை காக்க தான் இல்லை என்று கூறி வருத்தத்தை வெளிப்படுத்தனார்.
அமேலி விடுவிக்கப்படுவார் என்பதை அறிந்த
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான உடன்படிக்கையில் அமேலி விடுவிக்கப்படுவார் என்பதை அறிந்த தோமஸ் ஹேண்ட் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், தனது மகளுக்கு மிகப்பெரிய பிறந்தநாள் விழாவை நடத்தப்போவதாகவும் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மனைவியை இழந்த தன் மகள் மட்டுமே தனக்கு இருப்பதாக அவர் கண்ணீருடன் கூறுகிறார்.
செல்ல நாய்க்குட்டி
எமிலிக்கு ஜோன்சி என்ற செல்ல நாய்க்குட்டி உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பணயக்கைதியாக இருந்த எமிலி மற்றும் 13 பேரை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இஸ்ரேல் இராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
ילדים מוקפים במחבלי חמאס: החטופים הישראלים מועברים לצלב האדום | תיעוד@kaisos1987 pic.twitter.com/0XTrw2ep5I
— כאן חדשות (@kann_news) November 25, 2023
எமிலியை சந்திக்க செல்லும் வழியில் எமிலியின் செல்ல நாய்க்குட்டியான ஜோன்சியை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோமஸ் ஹேண்ட் இஸ்ரேலிய இராணுவத்திடம் கூறியபோது, இஸ்ரேலிய இராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |