பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி
கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில், அவரது மகனும் தற்போதைய தலைமை மதகுருவுமான மொஜ்தபா கமேனி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகின்றன.மேலும், வரும் ஜூலை 9 அன்று அவரது உடல் ஈரானின் மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்கமாட்டார்
கமேனியின் இறுதிச்சடங்கில் அவரது மகனும் தற்போதைய ஈரானின் தலைமை மதகுருவுமான அயதுல்லா மொஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்கமாட்டார் என ஈரானிய தலைமை மதகுருவின் இந்தியாவுக்கான பிரதிநிதி அயதுல்லா ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார். இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“நான் கடந்த வாரம் ஈரானுக்குச் சென்றிருந்தபோது அவரை (மொஜ்தபா) சந்தித்த என் நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். அவர் வெளியே வந்து மக்களைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்கள். ஆனால், அவர் வெளியே வருவதற்குப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.
பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.
மேலும், அது மிகவும் ஆபத்தானது அவருக்குத் தங்களால் போதுமான பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறியுள்ளனர். எனவே, இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்கமாட்டார் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கமேனியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வழக்கமாக ஈரானின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தலைமை மதகுருவின் தலைமையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |