மொனராகலைக்கு 45 பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து விபத்து!
Monaragala
Accident
Srilanka Bus
By Pavi
மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று புத்தல – மஹகொடய பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இன்று (11.08.2026) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது.
பேருந்து வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இ.போ.ச பேருந்து விபத்து
விபத்தில் பேருந்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற விதம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் முன்னெடுத்து வருகின்றனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி