பாதசாரிகள் மீது சொகுசு கார் மோதியதில் மூவர் காயம்!
Accident
By Pavi
கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வஸ்கடுவ-காலி வீதியில் சாலையிலிருந்து விலகிச் சென்றதில் விபத்துக்கள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வஸ்கடுவ-காலி வீதியில் அந்த வாகனம் எதிர்ப்புறப் பாதைக்குள் புகுந்து, மூன்று பாதசாரிகள் மீது மோதி, சாலையோரத்தில் இருந்த இரண்டு எல்லைக் கம்பங்களில் மோதி, பின்னர் சாலையிலிருந்து விலகிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவர் காயம்
ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது தூங்கிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |