நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு
எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காகச் செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்
அதன்படி, வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல், வாகன உரிமங்களைப் பதிவு செய்தல் அல்லது புதுப்பித்தல், நிலம் அல்லது வணிகங்களைப் பதிவு செய்தல்.

மற்றும் கட்டிடத் திட்ட அனுமதிகளைப் பெறுதல், பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடனட்டைகளுக்கு விண்ணப்பித்தல் ஆகியவற்றுக்குச் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் 2024 ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் 18 வயதை அடைந்த அனைவரும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.
உத்தியோகபூர்வ இணையத்தளம்
பதிவு செய்யாத நபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (eservices.ird.gov.lk) ஊடாகப் பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இணைய வழியில் சரிபார்க்கப்பட்ட முடிவின் அச்சுப் பிரதியையும் உத்தியோகபூர்வ சான்றிதழுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |