விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு
சின்ன வெங்காய பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை கருத்தில் கொண்டு அதற்கு இலவச காப்பீடு வழங்க விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் 06 வகையான பயிர்களுக்கு இலவச விவசாய காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது நெல், மிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம் மற்றும் சோயா ஆகிய பயிர்களுக்கே இவ்வாறு காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.
சின்ன வெங்காய பயிர்செய்கை
காட்டு யானைகளினால் ஏற்படும் பயிர் சேதம், வறட்சியினால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் கனமழை காரணமாக இந்த காப்புறுதி வழங்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கூறிய காரணிகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் அந்த விவசாயிகளுக்கு இலவச இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க் காப்பீட்டுப் பயிர்களில் சின்ன வெங்காயச் செய்கையையும் சேர்த்துக் கொள்ளுமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |