ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பணமோசடி
Sri Lanka
Sri Lankan Peoples
Law and Order
Online business
By Dilakshan
ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேநபர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவு
மேலும், கைது செய்யப்பட்டவரின் மூன்று வங்கிக் கணக்குகளில் சுமார் 72 இலட்சம் ரூபா பணம் காணப்பட்டுள்ளது.
கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் க னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்