திருமணம் செய்வதாக ஏமாற்றி பெருந்தொகை மோசடி! விமானப்படை வீரர் அதிரடி கைது
ஆஸ்திரியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஒரு கோடியே பதினேழு லட்சத்து முப்பத்து நான்காயிரம் ஏமாற்றிய குற்றச்சாட்டில் விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, தெல்தெனிய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குருநாகலைச் சேர்ந்தவரும் அம்பாறை விமானப்படை தளத்தில் பணியாற்றுபவருமான விமானப்படை வீரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செலவழிக்கப்பட்ட பணம்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முகப்புத்தகம் மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணை அடையாளம் கண்டு, அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ள நிலையில், சந்தேக நபருக்கு அவர் கொடுத்த பணம் செலவழிக்கப்பட்டதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |