உயர்ந்த மட்டத்திற்கு நகரும் வெளிநாட்டு பண அனுப்பல் - மத்திய வங்கியின் அறிக்கை
வெளிநாட்டுப் பணியாளர்களின் பணம் அனுப்பும் செயற்பாடுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், வெளிநாட்டுப் பணியாளர்களின் பணம் அனுப்பும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்றுமதி இறக்குமதி வருமானம் தொரடர்பாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கி அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,“கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளிநாட்டுப் பணியாளர்களின் பண அனுப்பல்கள், 314.4 மில்லியன் டொலராக பதிவாகி இருந்தது.
இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாத வெளிநாட்டுப் பணியாளர்களின் பண அனுப்பல்கள், 355 மில்லியன் டொலராக காணப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில், ஏற்றுமதி வருமானம் 9,991 மில்லியன் டொலராகவும், இறக்குமதி செலவு 14,085 டொலராகவும் பதிவாகியுள்ளது.”என தெரிவித்துள்ளது.