சாணக்கியனுக்கு பிக்கு பலமான எச்சரிக்கை - உடன் வழங்கப்பட்ட பதில்

Batticaloa Shanakiyan Rasamanickam
By Vanan Aug 23, 2023 06:10 AM GMT
Report

அடாவடி நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவர்களைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் காவல்துறை சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்றைய தினம்(22) சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்கு சாணக்கியனது பெயரைச் சொல்லி அங்கு சென்றவர்களுக்கும் பாரிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.

மிகுந்த சந்தேகம்

சாணக்கியனுக்கு பிக்கு பலமான எச்சரிக்கை - உடன் வழங்கப்பட்ட பதில் | Monk Strong Warning To Chanakyan Mp

இது தொடர்பில் பதிலளிக்கையில் சாணக்கியன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவரை சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் .

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை, சர்வதேச குற்றவியல் சட்டம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு ICCPR Act No 56 of 2007- INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS சட்டம் மூலம் இப் பிக்குவானது கைது செய்யப்பட வேண்டும்.

தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே. இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எம்மால் இயன்ற அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அப்பிக்கு சொல்வதைப் போன்று எமது மக்களின் இப்பிரச்சினைக்கு தமிழரசுக் கட்சியும் நானுமே அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.

மற்றைய குறிப்பாக, அரச சார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மௌனம் மிகுந்த சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது” எ்னறார்.


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி