அயோத்தி ராமரை பாதுகாக்க கருவறைக்குள் நுழைந்த அனுமன்! அடுத்து நடந்த ஆச்சரியம்
அயோத்தியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பால ராமனை தரிசிக்க அனுமன் வந்து சென்றதாக ஆலய பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (24) மாலை 5.50 மணியளவில் தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று உற்சவர் சிலையருகே சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர்கள், உடனடியாக செயற்பட்டு குரங்கை நோக்கி விரைந்தனர்.
உற்சவர் சிலையை
அது உற்சவர் சிலையை தரையில் தூக்கி வீசிவிடக் கூடும் என பயந்து, காவல்துறையினர் அந்த குரங்கை நோக்கி ஓடியதும், அந்த குரங்கு அமைதியாக வடக்கு வாசலை நோக்கி ஓடியது.
ஆனால், அதன் கதவு மூடப்பட்டு இருந்ததன் காரணத்தால், கிழக்கு நோக்கி திரும்பி திரண்டிருந்த கூட்டத்தினரை கடந்து சென்றது.
எவருக்கும் எந்தவித தீங்கும் செய்யாமல் கிழக்கு வாசல் வழியாக அந்த குரங்கு வெளியேறியது.
ராமர் கோவிலின் கும்பாபிஷேகம்
குழந்தை ராமரை பார்ப்பதற்காக அனுமனே நேரில் வந்தது போன்று தங்களுக்கு தோன்றியது என அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்கள் கூறினார்கள்.
புதிதாக நிறுவப்பட்ட கோவிலில் கடவுள் ராமரை பாதுகாக்கும் பணியை அனுமன்ஜி தொடர்ந்து மேற்கொள்கிறார் என்பதற்கான அடையாளமே இந்த நிகழ்வு என பக்தர்கள் பலரும் தற்போது தெரிவித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் அமைந்த பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில், கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அலை அலையாக வர தொடங்கியுள்ளனர், இதனால், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |