குரங்குகளை ஏற்றுமதி செய்யாமல் ராஜபக்சக்களை சீனாவிற்கு கடத்த வேண்டும்!
குரங்குகளை ஏற்றுமதி செய்யாமல் ராஜபக்ச சகோதரர்களுடன் தற்போதையே ஆட்சியாளர்களையே சீனாவிற்கு நாடு கடத்த வேண்டும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ. ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், விவசாயத்துறை சார்ந்த போதிய நிபுணத்துவம் இல்லாததாலேயே நாட்டில் விவசாயத்துறை பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
காட்டுயிர்கள் வாணிப ஒப்பந்தம்
"குரங்குகளை ஏற்றுமதி செய்வது பொருத்தமில்லாத செயற்பாடு. அந்த முயற்சிகளை நிறுத்த வேண்டும்.
1979 ஆம் ஆண்டு காட்டுயிர்கள் வாணிப ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் தொடர்பில் தற்போதைய விவசாய அமைச்சர் அறிந்திருந்தால் இந்த விடயத்தை வெளிப்படையாக அறிவித்திருக்கமாட்டார்." என தெரிவித்தார்.