ஞானசாரர் ஆதரவு போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை : நீதிமன்ற அறிக்கையை கசக்கி எறிந்த போராட்டக்காரர்கள்
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு ஆவணத்தைச் சிலர் கசக்கி எறிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, நேற்று (15) மாலை முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்ற உத்தரவைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையினர் வாசித்துக் காட்டியிருந்தனர்.
இதன்போது, அந்த உத்தரவு ஆவணத்தைப் பெற்றுக்கொண்ட சிலர் அதனைக் கசக்கி எறிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காவல்துறை பேருந்நு வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |