கோட்டாபய அரசின் இரகசிய செயற்பாட்டுக்கு எதிராக வீதியில் இறங்கிய பிக்குகள்
protest
pikku
polonnarwa
By Sumithiran
பொலநறுவை பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கு அருகில் நடைபாதை ஒன்று அமைக்கும் அரசின் செயற்பாட்டிற்கு எதிராக இன்றையதினம் பௌத்த பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச நிறுவனங்களின் அனுமதியுடன் 34 மில்லியன் ரூபா செலவில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த நடைபாதை அமைப்பதானது சமுத்திரத்தின் அணைக்கட்டுக்கு பாதிப்பாக அமையும்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் மிகவும் இரகசியமாக என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என்பது தெரியவரவில்லை என பிக்குகள் மேலும் தெரிவித்தனர்.




1ம் ஆண்டு நினைவஞ்சலி