மொனராகலையில் விபத்து: முதியவர் உயிரிழப்பு: எட்டு பேர் வைத்தியசாலையில்
Monaragala
Accident
Death
By Sindu
மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், வெதிகும்புரவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சுமார் எட்டு வயதுடைய சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
70 வயதானவர்
அலியாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மொனராகலை போக்குவரத்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |