மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து வெளியான தகவல்
நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அந்தவகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஜூன் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தங்களை அறிவித்தது.
அதன்படி, லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாக பதிவாகியிருந்தது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபா என அறிவிக்கப்பட்டது.
92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாக பதிவு செய்யப்பட்டது.
இதேவேளை கடந்த மாதம் லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
