சிறிலங்காவில் கொரோனா பலி 10,500ஐ கடந்தது!
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் 184 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,504ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 97 ஆண்களும், 87 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, 30 வயதுக்கு கீழ்பட்ட 3 ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
30 - 59 வயதுக்குட்பட்ட 26 ஆண்களும், 20 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட 68 ஆண்களும், 66 பெண்களுமாக மொத்தம் 184 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.