ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த 19 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவந்த செய்தி
sri lanka
people
afganistan
By Shalini
ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நேற்று (24) நாடுதிரும்பியுள்ளனர்.
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் அந்நாட்டில் 92 இலங்கையர்கள் இருந்தனர்.
அவர்களில் 26 பேர் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிவருபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 6 இலங்கையர்கள், இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (25) இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி