சடுதியாக குறைந்த கொரோனா மரணங்கள்
corona
sri lanka
death
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,449 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 09 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.