மீண்டும் 20ஐ தாண்டியது கொரோனா உயிரிழப்புக்கள்
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் நேற்று (17) கொரோனா தொற்றால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,507 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று உயிரிழந்துள்ளவர்களில் 10 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
30 வயதுக்கு கீழ்பட்ட யாரும் நேற்று உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.