30 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட 92 பேர் கொரோனாவால் மரணம்
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 92 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று உயிரிழந்த 92 பேரில், 51 பேர் ஆண்களாவர். மீதமுள்ள 41 பேர் பெண்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வயதுக்கு குறைந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.
இதையடுத்து, மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 12,376 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.