கொழும்பு உட்பட பல மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
corona
sri lanka
By Shalini
கொழும்பு உட்ப நான்கு மாவட்டங்களில், பொலிஸ் பிரிவு ஒன்றும், 7 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (02) காலை 6 மணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின், வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய மற்றும் மாலமுல்ல கிழக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் பிரிவின், உவர்மலை கிராம சேவகர் பிரிவு, உப்புவெளி பொலிஸ் பிரிவின், அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின், வலப்பனை பொலிஸ் பிரிவின், நீலந்தந்தஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்