நெருங்கிய நட்பே உடந்தையாக இருக்க காரணம்: லசா கொலையில் அதிர்ச்சி தகவல்!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், துப்பாக்கிதாரியுடனான நெருங்கிய நட்பு காரணமாகவே கொலைக்கு உதவியதாகவும் வாக்குமூலங்களில் தெரியவந்துள்ளது.
குறித்த கொலையின் முக்கிய சந்தேகநபர்களான துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, காவலில் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காலி, ஹல்பே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் எனவும் அவர் போதைப் பழக்கத்திற்கும் அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது.
நட்பே காரணம்
மேலும், துப்பாக்கிதாரியுடனான நெருங்கிய நட்பு காரணமாக இந்த கொலையில் அவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயல்பட்டதாக அவரது வாக்குமூலத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிகம பிரதேச சபைத் தலைவரைக் கொல்லச் சென்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கெக்கிராவயில் இருந்து மஹரகமவிற்கும் நாவின்னவிற்கும் இடையிலான ஒரு தொலைபேசி கடைக்கு பேருந்தில் சென்றதும் தெரியவந்துள்ளது.
அதன்படி, விசாரணையின் போது, அவர் தனது கையடக்கத் தொலைபேசிக்கான பவர்பேங்க் (Power bank) மற்றும் டேட்டா கேபிளை (data cable) வாங்க தொலைபேசி கடைக்குச் சென்றதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வெலிகம தலைவரின் கொலைக்கான காரணம் இதுவரை விசாரணைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. மேலும், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்