ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 100க்கும் அதிகமான சடலங்கள்! (காணொளி)
சியரா லியோனில் பெட்ரோல் லொறி வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 100க்கும் அதிகமானோரின் சடலங்கள் ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்பட்டன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் தலைநகா் ஃப்ரீடௌனின் புகா்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்த பெட்ரோல் லொறியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
அதையடுத்து, லொறியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமானவா்கள் கூடினர். அப்போது திடீரென லொறியில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இந்த கோர சம்பவத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு நாட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு ஒரே இடத்தில் நேற்று புதைக்கப்பட்டது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,